Posted by:Sirojan Gnanaretnam
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்
Tuesday, September 28, 2010
Friday, September 24, 2010
வனவாசம்(16 ம் நாள் உற்சவம் 22.09.2010)
வனவாசத்தில்-ஒரு இலைவாசம் அது வதவாசம்.
பீமன் செய் கதளி வனமளிப்பு.
இலை,குழை உண்டு சாத்வீக குணமுள்ளோர் சாத்வீக உணவு மரக்கறி உண்போருக்கு போர்க்குணம் வீரமாய் ஒளிரும் போது,வீமன் செய் கதலி வனமளிப்பு வாழைக் குலைகள் வெட்டி வீழ்த்துவதும்,பழங்கள் கனிவகை ஒடித்து விடுவதும்,போரிலே நல்லவர்கள் மடிவதை உணர்த்தும் அது போர் என்றாலும்,சத்தியம் அங்கே சங்கமிக்கும்.ஆன்மாவானது மேல்நோக்கி உயர்ந்து செல்லும் போது மோட்ச காலத்தில் மிதமாக மிளிரும் அது முல்லை,முசுட்டை,காரை,கனாந்தி,பிரண்டை என ஐந்தும் ஐம் பூதங்களில் சாத்வீகத்தில் சங்கமிக்கும் சங்கதி வனவாசத்தில் காணலாம்.மேன்மக்கள் உணவு அது இறந்த தென்புலந்தோர் தோட்டமது.
அரசடி அம்மன் ஆலுயத்து
அரசமரத்திலொரு கொத்து
பீமன் வாள் மாறியதும் (தருமரிடம் வாங்கியதும்)அதே நொடியில் ஓடிச் சென்று,அரசடி அம்மன் ஆலயத்து அரசமரத்தில் ஒரு கொத்துச் செடி கொடிகள் பறித்து வந்து பாண்டவர்களிடம் கொடுப்பர்.அந்தக் கொத்துச் செடியிலுள்ள முல்லை,முசுட்டை,காரை,கனாந்தி,பிரண்டை என்ற ஐந்துமே மோட்ச இலைகளாகும்.அவற்றையே மறுநாள் பீமன் செய்து பாண்டர்களுக்கு கொடுப்பர்.இந்தச செயல் பாண்டவர்களின் விராடபர்வ அஞ்ஞான காலத்தில் பீமன் வல்லாளன் என்ற பெயரில் விராடமன்னரின் அரன்மனையில் சமயல்காரராகச் சேவை செய்ததைக் குறிக்கும்.
அஞ்ஞாத வாசமும் உண்டு
அது துரியோதனன் நாடுமாகும்மெய்ஞான விந்தையிது,விளக்கமும் விடுகதை
பாண்டவர் வனவாச காலத்திலே அஞ்ஞாத வாச காலம் மிகவும் விந்தையானது மாறு வேடத்தில் பாண்டவர்கள் பயந்தொடிங்கி வாழ்வது.ஆன்மாவானது கூனிக் குறுகிச் சென்று சிவத்தையடைவதை உணர்த்தும்.ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்திற்கு தென்மேற்கே நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு வரைச்செல்லும் பாண்டவ வனவாசம்.சேனைக்குடியிருப்பு காளி கோவிலையடைந்ததும் அங்கே வீரவிளையாட்டுக்கள் நடைபெறும்.பெலிகள் இட்டு தேவாதிகள் இரத்தம் சிந்திய போரின் உச்சக்கட்டம்,பேய் நிலையில் ஆன்மா ஈடுபட்டு இரத்தம் குடிப்பது பின் பேய் நிலை தளர்ந்து சரணாகதியடைவதும்,ஆன்மா கூனிக்குறுகும் நிலையைக்காட்டும்,காளி கோயில் பூசை வேள்வி முடிந்ததும் ஆலயத்தின் பின்னாலுள்ள வீதி வழியாக வயல் வெளியூடாக பாண்டிருப்பு பெரியகுளக்கட்டு வரையுள்ள வழிகள் அஞ்ஞாதகால விராட நாடு என எண்ணிக்கொண்டு வனவாசம் புறப்பட்டவர்கள் மௌனமாக வருவார்கள்.பின் குளக்கட்டை அடைந்ததும்,மேளம் ஒலிக்க மணிகள் ஒலிக்க ஆலயத்தை வந்தடைந்ததும் மறுநாள் தவநிலை நேரம் வரை அஞ்ஞாத வாசவிரதம் கடைப்பிடிக்கப்பட்டு உறக்கப்பூசை கண்டு,பின் ஆன்மாவானது சோர்வு நீங்கி பேரின்ப நிலையை அடைவதை தவநிலை உணர்த்தும்.

Tuesday, September 21, 2010
நாடகால் வெட்டும் வைபவம்(8 ஆம் நாள் 14.09.2010)
எட்டாம் நாள் அதிகாலை ஒரு சுப நாள்,எடுக்கும் ஒரு நாட்கால் வெட்டல்,கட்டுக்கு நிற்போர் தீப்பாய அதுவே கரு.உடம்பு சுயமாக இயங்குவதில்லை,ஆத்மா இந்த பூவுலகில் வாழும் போது மோட்சப் பேறுக்காக,உடம்புக்கு உதவுகின்றது.தானம் தவங்கள்,விரதாதிகளினால் புனிதமடைந்து எப்போதோ வரப்போகும் மோட்சத்திற்காக,அது நற்காரியங்கள் செய்து,மோட்சத்திற்கு நன்மை சேர்ப்பது போல,எப்போதோ மூட்ட வேண்டிய தீக்கு இப்போது சுப நாள் கட்டை வெட்டப்படுகிறது.
Monday, September 13, 2010
சுவாமி எழுந்தருளப்பண்ணல்(7ஆம் நாள் உற்சவம் 13.09.2010)
மாணிக்கப் பிள்ளையாரின் ஆலயத்தில்
மகா சக்தியின் மகிமை காணீர்
ஏழாம் நாளில் எடுப்பாய் ஓர் விழா
ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில் கொடியேற்றம் செய்து ஏழாம் நாள் கண்ணன் அத்தினாபுரம் வரல் என்ற நிகழ்ச்சி "சுவாமி எழுந்தருளல்" என்ற பேரேடு எடுப்பாய் நிகழும்.அத்தினாபுர எல்லை எனக் காட்டும் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாண்டவர் வேடம் பூண்டவர்களால்,பல்லக்கில்(தேரினில்)உபசாரங்களால் தூக்கி வருவதும்,அன்றைய நிகழ்வில் ஓர் அம்சமாக திரௌபதி கண்ணனிடம்,தன்னிலை எண்ணிக் கதறுவதாக அழைப்பதான ஓர் நிகழ்வும்,திரெளபதியாக வேடம் பூண்ட விரதகார அன்பருக்கு மந்திர உச்சாடனங்கள் செய்து தெய்வமாட உருவேற்றித் தோத்திரங்கள் செய்து ஆடவைப்பர் உருவாடியபின் உருவாடியவரில் இருக்கும் தெய்வம் வாக்குகொடுப்பர்,இக்காலமே துரியோதன் சபையில் துர்ச்சாதனன் துகில் உரிந்த நிலையில் அந்நிலையில் ஒரு கையால் தன்னை காத்துக் கொண்டுகதறிய திரௌபதி,இரண்டு கைகளையும் நீட்டி பூரணசரணாகதியடைந்ததும்,கண்ணன் வந்ததாக உள்ள ஐதீகத்துக்கு கேட்ப நேரமெடுக்கும்,அதன் பின்னரே உருவேறும்,தெய்வமாடி திருவாக்குக் கொடுப்பார்.

Subscribe to:
Posts (Atom)