முகப்பு

நீடாழியுலகத்து மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்னநாள் ஏடாகமாமேரு வெற்பாங்கவங்கூ ரெழுத்தாணிதன் கோடாகவெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ......
கார்பொழிய செந்நெல் களனியெல்லாம் நெல்பொலிய பார்புகழும் பாண்டிருப்பூர் பாண்டவரும் பாஞ்சாலி போர்புகழும் பாரதத்தை நாளுரைக்கும் நற்பதியை சேரும்
ஸ்ரீ துரோபதையாள் சிந்தை செய்யின் நற்கதியே!
அம்மன் அடியார்களே!
அகில இலங்கையில் பிரசித்தி பெற்றதும் ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்ததை அடிப்படையாகக் கொண்டதும் பண்டைய சரித்திரப் புகழ் பெற்றதும் இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்த தாதன் என்னும் மாமுனியால் அறிமுகம் செய்யப்பட்டதும்,தஞ்சம் என்று தன்னை நாடும் அடியார்களுக்கு அஞ்சேல்,என அபயமளிக்கும் ஸ்ரீபாஞ்சாலி ,ஐவராசாக்கள்,குந்திதேவி,ஸ்ரீ கிருஷ்ணர் சகிதம் குடிகொண்டிருக்கும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நிகழும் வகிர்தி வருடம் ஆவணி மாதம் 22ம் நாள் 07-09-2010 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி புரட்டாதி 08ம் நாள்(24-09-2010)வெள்ளிக்கிழமை தீப்பள்ளயத்துடனும்,புரட்டாதி 09ம் நாள் 25-09-2010 சனிக்கிழமை பாற்பள்ளயம் முதலிய வைபவங்களுடன் நிறைவுபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருவதோடு இவ்விழாக்காலத்தில் பூசை ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ திரெளாதை அம்மன் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
உற்சவகால வி​ஷேட நிகழ்வுகள்
07-09-2010  செவ்வாய்க்கிழமை :மாலை விஷேட ஆராதனையுடன் திருக்கதவு திறத்தலும்,கடலுக்குச் சென்று ஆராதனை செய்து ஊர்காவல் பண்ணி ஊர்வலம் வருதலும் ,ஆராதனையுடன் கொடியேற்றலும்.
13-09-2010 திங்கட்கிழமை: இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல்,(ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகா புரியிலிருந்து அத்தினா புரத்திற்கு வருகை தருதல்)
14-09-2010 செவ்வாய்க்கிழமை:அதிகாலை நாட்கால் வெட்டுதல்.